தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை இயக்கியவர் தான் இயக்குநர் ஹரி. அந்த வகையில் இவரது இயக்கத்தில் விஷால் ,விஜய், விக்ரம், சூர்யா எனப் பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் சாமி 2.
இப்படத்தினைத் தொடர்ந்து இவர் இயக்கி முடித்துள்ள திரைப்படம் தான் யானை. இதில் இவருடைய மச்சானும் நடிகருமான அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
அத்தோடு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இயக்குநர் ஹரி பேசியதாவது: எனது 'தமிழ்' படத்தில் ஆரம்பித்த பயணம், மெல்ல மெல்ல ஆக்ஷன் படங்களுக்கு தாவி… அதில் வெற்றி கிடைத்ததால் அதிலேய பயணித்து தெலுங்கு படங்கள் மாதிரியான படங்கள் வரை சென்று விட்டேன்.
எனக்கு சில ஆண்டுகள் இடைவெளி கிடைத்தது. அதில் நான் நிறைய சிந்தித்தேன். நிறைய படங்கள் பார்த்தேன். இப்போதுள்ள டிரண்டை புரிந்து கொண்டேன். அதனால் என்னை முழுமையாக மாற்றிக் கொண்டு உருவாக்கி உள்ள படம் யானை.
இதில் எனது பாணியிலான படு வேகம் இருக்காது, ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட் இருக்காது. ஒரு எமோல்சலான, பீல் குட் படமாக இருக்கும். இரண்டு இடத்திலாவது ஆடியன்ஸ் கண்ணீர் சிந்தினால் இந்த படம் வெற்றி. அப்படி யோசித்து இந்த படத்தை எடுத்துள்ளேன். யானை எப்போதும் தன் குடும்பத்துடன் இருக்கும், மிகுந்த பொறுமையான விலங்கு. ஆனால் அதற்கு கோபம் வந்தால் என்ன ஆகும் அதுதான் இந்த படத்தின் கதை. என்றும் கூறியிருக்கின்றார்.
Listen News!