• Sep 20 2024

"விஜய் 66'' படத்தின் தலைப்பு இது தானா-இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய். இவர் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். அத்தோடு இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகின்றார்.

இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவருடன் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இன்னும் பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

வேகமாக நடந்து வரும் விஜய்66 படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸாகவுள்ளது.

மேலும் நேரடி தெலுங்கு தமிழில் உருவாகிவரும் இப்படத்திற்கு Vaarasudu –வாரசுடு என்று பெயரிட்டுள்ளதாகவும், இதற்குப் பொருள் வெற்றி எனக் கூறப்படுகிறது.

தமிழிலும் இதன் வெற்றியை அடிப்படையில் அமையலாம் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement