தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் உச்ச நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் தனது 66 படத்தை நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருடன் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து தனது 67 படத்தை இயக்கும் பணியை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடம் ஒப்படைத்துள்ளார். இப்படம் குறித்த அப்டே்டுகளும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகும் என்று கூறப்படுகின்றது.
மேலும் அடுத்ததாக இவரது 68வது படத்தினை இயக்குநர் அட்லி இயக்குவதாக கூறப்படுகின்றது. அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.
இவர்கள் 4 வது முறையாக கூட்டணி அமைப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அந்தவகையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68வது படத்தில் பிகில் படத்தில் விஜய் நடித்த ராயப்பன் என்ற அப்பா கேரக்டரை பிரதானப்படுத்திய ஒரு கதையை அட்லி தயார் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
அத்தோடு அப்படத்திற்கு ராயப்பன் அல்லது பிகில் - 2 என்று டைட்டில் வைப்பதற்கு விஜய்யும், அட்லியும் பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!