• Sep 20 2024

நந்தினியிடம் பாச மழை பொழியும் கதிர்... அடடே இது நம்ம லிஸ்ட்டிலேயே இல்லையே... வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகர்கள் அனைவருமே ஏதோ ஓர் வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். அந்தவகையில் இந்த சீரியலில் உள்ள அத்தகைய ஒரு அருமையான கதாபாத்திரம் தான் நந்தினி. இவர் தனது கணவரான கதிரால் பல கொடுமைகளுக்கு உள்ளாகி வருகின்றார். 


இந்த கதாபாத்திரத்தில் நடிகை ஹரிப்பிரியா நடித்து வருகின்றார். இவருக்கு நிறையவே ரசிகர் பட்டாளம் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான். இந்நிலையில் ஹரிப்ரியாவான நந்தினி தற்போது தனது கணவன் கதிருடன் இணைந்து ஓவர் ரொமான்ஸில் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.

சீரியலை பொறுத்தவரையில் இவர்கள் இருவரது கதாபாத்திரமும் கீரியும் பாம்பும் போலவே சித்தரிக்கபட்டுள்ளது. எனவே இவர்கள் இருவரது ரொமாண்டிக் வீடியோவினையும் பார்த்த ரசிகர்கள் "இது நம்ம லிஸ்ட்டிலேயே இல்லையே" எனக் கூறிக் கிண்டலடித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement