• Sep 20 2024

இது நம்ம கானா பாடகி இராஜலட்சுமியா…மொடேர்ன் உடையில் கலக்கலாக வெளிவந்த வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர்.

ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது வித்தியாசம் காட்டுவார்கள். அப்படி ஒவ்வொரு சீசனிலும் கானா பாடல் கலைஞர்களை நிகழ்ச்சியில் கொண்டு வருவது வழமை.

அந்த வகையில் ஒரு சீசனில் கானா பாடல்களை மட்டுமே பாடி அந்த சீசனையும் வெற்றிக்கண்டவர் செந்தில். இவரது மனைவி ராஜலட்சுமியும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.

அந்த வகையில் ராஜலட்சுமி அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஐயா சாமி என்ற பாடலை பாடியிருந்தார். தொடர்ந்தும் இருவரும் இணைந்து பல பாடல்களைப் பாடி வருகின்றனர்.

அத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கு கொள்ளப் போகின்றார் என்ற தகவல் கசிந்த வண்ணம் உள்ளது.இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இந்நிலையில் படு மோடேர்ன் உடையில் கலக்கலாக காரில் வந்து இறங்கும் வீடீயோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.இதைப் பார்த்த ரசிகர்கள் இது நம்ம இராஜலட்சுமியா என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement