தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் விஜய். சுமார் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர் நடிப்பில் தற்போது 'வாரிசு' திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் 'தளபதி 67'.
இப்படத்தின் வாயிலாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடிக்கவிருக்கிறார். இதுவரை காலமும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகமேலே இருந்து வந்தன.
ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொது எப்போதும் போலவே தளபதி 67 குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது எனக் கூறிவிட்டார்.
தளபதி 67 பற்றித்தான் பேசவில்லையே தவிர ஆனால் அவரின் திரைப்படங்களில் விமர்சையாக பயன்படுத்தி வரும் பழைய பாடல்கள் குறித்து பலவகையில் சொல்லியிருக்கிறார். அதாவது அடுத்தாக சத்யராஜ் நடிப்பில் வெளியான 'வில்லாதி வில்லன்' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை ஒரு சில படங்களில் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக பேசியிருக்கிறார்.
இதனைக் கேட்டதும் நம்ம தளபதி ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா.? உடனே தளபதி 67 திரைப்படத்தில் அந்த பாடலை எதிர்பார்க்கலாம் எனப் பதிவிட்டு அப்பாடலை வைரலாக்கி வருகின்றனர்.
இதோ அந்தப் பாடல்..!
#LokeshKanagaraj hints in Vijay TV interview tjat he's gonna use this song in upcoming film..❤️🔥 Maja song..🔥#Thalapathy67 ⭐pic.twitter.com/dFvqncAtlV
Listen News!