• Sep 20 2024

விஜய் வைத்திருக்கும் ஆயுதமே இது தான், அரசியலுக்கு வந்திடுவாரு- சீக்ரெட்டை உடைத்த நடிகர் அர்ஜுன்

stella / 10 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ படத்தின் வெற்றி விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

 முன்னதாக படம் ரிலீஸாகும் முன்பு, லியோ இசை வெளியீட்டு விழா, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டதாகவும், இதற்கு அரசியல் அழுத்தம் காரணமில்லை எனவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனால், லியோ வெற்றி விழாவுக்கு போலீஸார் அனுமதியுடன் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தான் அதிகளவில் கலந்துகொண்டதாக தெரிகிறது. அவர்களுக்கும் லியோ சக்சஸ் மீட் பாஸ், ஆதார் அட்டை, மக்கள் இயக்கம் ஐடி கார்டு ஆகியவை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படத்தில் நடித்த நடிகர்கள், படக்குழு என மொத்த பேரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கின்றனர். மேடையில் நடிகர் அர்ஜுன் பேசும்போது விஜய் கூடியவிரைவில் அரசியலுக்கு வந்துவிடுவார் அவருடைய அமைதி தான் அவருக்கு மிகப் பெரிய ஆயுதம் என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்டு ரசிகர்கள் கூச்சலிட்டனர்.


மேலும் விஜய்யிடம் அர்ஜுன் ஒரு கேள்வியும் கேட்டிருக்கிறார். 'விஜய்யாக இருப்பது ஈஸியா கஷ்டமா?' என அவர் கேட்க, 'வெளியில் இருந்து பார்க்கும்போது கஷ்டம் போல தான் தெரியும். ஆனால் ரொம்ப ஈஸி தான் சார். அதற்க்கு மெயின் காரணம் ரசிகர்கள் தான்' என விஜய் பதில் கூறி இருக்கிறார்.  



Advertisement

Advertisement