• Nov 19 2024

லவ் டுடே படம் பார்த்து போனை மாத்திக்கலாமானு கேட்ட ஸ்டாலின் மனைவி-கடைசியில் நடந்தது இது தானாம்.. !

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லவ் டுடே படம் பார்த்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் என்பது குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீசான திரைப்படம் லவ் டுடே. கோமாளி படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய இரண்டாவது படம் இதுவாகும். மேலும் இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். அத்தோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இயக்குநர் பிரதீப் தான் இப்படத்தில் நாயகனாகவும் நடித்து இருந்தார்.மேலும்  அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இதுவாக இருந்தாலும், இப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த லவ் டுடே படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது.

வெளியானது முதல்  ரசிகர்களிடம் இருந்து அமோக வரவேற்பை பெற்றது. அத்தோடு  இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. இரண்டாவது வாரத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம் வெளியான 9 நாட்களில் 35 கோடிக்கு மேல் வசூலித்தது. மேலும் இப்படத்திற்கு பிரபலங்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்து இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டினார்.

இவ்வாறுஇருசக்கையில், லவ் டுடே படம் பார்த்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் என்பது குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் கூறி உள்ளார். அதன்படி “லவ் டுடே படத்தை அப்பா, அம்மா உடன் சேர்ந்து பார்த்தேன். படம் முடித்து வெளியே வந்ததும் படம் நல்லா இருக்கு உதயானு அப்பா கூறினார். இதைவிட செம்ம காமெடி என் அம்மா சொன்னது தான். படம் சூப்பரா இருக்கே, இதே மாதிரி நம்மளும் போனை மாத்திக்கலாமானு கேட்டாங்க. நானும், அப்பாவும் அய்யய்யோ வேணவே வேணாம்னு சொன்னோம்” என சிரித்தபடி கூறினார் உதயநிதி.


Advertisement

Advertisement