• Nov 17 2024

“தவறுகளுக்கு பெயர் போன இடத்தில் சேர்ந்தால் இப்படித்தான்..” இளையராஜாவின் தக்க பதிலடி கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்-தீயாய் பரவும் பதிவு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாரதியார் குறித்து இளையராஜா கூறிய கருத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்து போட்டு இருக்கும் பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

 தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. மேலும்  இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார்.அத்தோடு இவரின் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். மேலும், சமீபத்தில் இளையராஜாவுக்கு Mp சீட் கிடைத்து இருக்கிறது.

இவ்வாறு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு இருந்தது. எனினும் இதனை அடுத்து இளையராஜாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருந்தது. இப்படி அடுத்தடுத்து இளையராஜாவிற்கு மத்திய அரசில் இருந்து கௌரவம் குவிந்து வருகிறது. இவ்வாறுஇருக்கையில்  உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி நடந்தது. காசி தமிழ் சங்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.

75 வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடந்து இருக்கிறது. அத்தோடு பழங்காலம் தொட்டு தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் உள்ள தொடர்பை கொண்டாடும் விதமாக இந்த சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.அத்தோடு  பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த கொண்டாட்ட விழா நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


எனினும் அப்போது மேடையில் இளையராஜா கூறியிருந்தது, காசி நகருக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை அனைவரும் விளக்கி பேசி இருந்தார்கள். பாரதியார் இங்கு இரண்டு வருடம் படித்திருக்கிறார். ‘காசி நகர் புலவர் இங்கே செய்யும் பேச்சுக்களில் காசியில் கேட்க ஒரு கருவி செய்வோம்’ என்று இந்தியாவிற்கு எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத நேரத்திலே அவர் அந்த பாடலை பாடியிருக்கிறார். அத்தோடு கங்கை நதி புறத்து கோதுமை பண்டம், காவேரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம் என்றும் வங்கத்தின் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்தின் நாடுகளில் பயிர் செய்வோம் என்று நதிகள் இணைப்பு திட்டம் வருவதற்கு முன்பே தனது 22 வயதில் பாடி சென்றவர்.

அதேபோல் கபீர் இரண்டு அடிகளில் பாடி இருக்கிறார். தமிழில் திருவள்ளுவர் திருக்குறளை இரண்டே அடிகளில் எழுதி இருக்கிறார். மேலும், கர்நாடக சங்கீதத்தின் மாமேதை என்று போற்றக்கூடிய மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இங்கே வந்து பல இடங்களில் தேசாந்திரமாகப் பாடி சென்றவர். எனினும் கங்கை நதிகளில் மூழ்கி எழும்போது அவர் கையிலே சரஸ்வதி தேவி வீணையைப் பரிசளித்திருக்கிறார். அந்த வீணை இன்னும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த இந்த காசி நகரிலே தமிழ்ச் சங்கமத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற எண்ணம் நமது பிரதமர் அவர்களுக்கு எப்படித் தோன்றியது என்பதை நான் மிகவும் வியந்து கொண்டிருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.


இவ்வாறுஇருக்கையில்  பாரதி குறித்து இளையராஜா கூறியதற்கு ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், காசி விழாவில் திரு இளையராஜா பேசும் போது, பாரதி இரண்டு ஆண்டுகள் காசியில் வாழ்ந்ததாக சொன்னார். அது தவறு. அவருடைய ஒன்பது வயதில் இருந்து 11 வயது வரை இருந்ததாக சொன்னார். அதுவும் தவறு. பாரதியார் காசியில் (அப்போது பனாரஸ்) 1898-1902 வரை இருந்தார். தன்னுடைய 16 ஆம் வயதிலிருந்து. தவறுகளுக்கு பெயர் போன இடத்தில் சேர்ந்தால் இப்படித்தான் என்று ஜேம்ஸ் வசந்தன் இளையராஜா கூறியதை விமர்சித்து பதிவு போட்டு இருக்கிறார்.

Advertisement

Advertisement