கொம்பன், மருது, விருமன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் முத்தையா. குறிப்பாக கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான இவர் தற்போது காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தை இயக்கியிருந்தார்.இப்படம் கடந்த ஜூன் 2 ஆம் தேதி, வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தது.
இப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இத்னானி நடித்திருந்தார். கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக இப்படம் வெளியாகியது. இதற்கு ஜு.வி பிரகாஜ் இசையமைத்து இருந்தார்.இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தைத் தொடர்ந்து ஆர்யா, கவுதம் கார்த்திக் உடன் இணைந்மு மனு ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மஞ்சுவாரியார் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் ஆர்யா இயக்குநர் முத்தையாவுடன் இணைந்து அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அப்போது உங்களுக்கு நீங்க நடித்த படத்தில் எந்தப் படம் பிடிக்கும் என்று கேட்ட போது ஆர்யா எனக்கு எல்லாமே பிடிக்கும் தான். அதிலும் மதராசப்பட்டினம் திரைப்படம் தான் அதிகம் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!