• Sep 20 2024

சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்வதற்கு முன் செய்த விஷயம் இதுதான்- முதன்முறையாக கூறிய அவரது கணவர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல விஜேவாகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் சித்ரா. கால்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் சித்ரா.

ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இப்படியான சூழலில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் தற்கொலைக்கு காரணம் ஹேமந்த் தான் என அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மார்ச் 2021 ஆம் ஆண்டில் ஜாமினில் வெளிவந்தார்.இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீஸில் புகார் அளித்துள்ளார் ஹேமந்த்.

நடிகை சித்ராவை திருமணம் செய்துகொண்ட ஹேமந்த் இத்தனை வருடம் இல்லாமல் இப்போது அவரது தற்கொலை குறித்து பேசி வருகிறார்.காரணம் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாகவும் சில உண்மைகள் வெளியே வரக் கூடாது என்பதற்காக தன்னை சிலர் மிரட்டுகிறார்கள், எனவே தனக்கு பாதுகாப்பு வேண்டும் என ஹேமந்த் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அதன் பின் அவர், சித்ரா மரணத்திற்கு நான் காரணம் என்கின்றனர், ஆனால் அவரது தற்கொலைக்கு பின்னால் வேறு விஷயம் இருக்கிறது, அதை வெளிப்படையாக இப்போது சொல்ல முடியாது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்றால் நான் சில உண்மைகளை வெளியே கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

சித்ரா இறந்த அன்று இரவு ஷுட்டிங் முடித்துவிட்டு அறைக்கு வரும்போது அவர் கொஞ்சம் மன கவலையுடன் தான் இருந்தார், என்ன காரணம் என எனக்கு தெரியும். ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை பார்த்துக்கொள்ளலாம் என சமாதானப்படுத்தி ஹோட்டல் ரூம் வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போதும் அவர் கொஞ்சம் வருத்தமாகவே காணப்பட்டார். ரூம் செல்வதும் வெளியே வந்து உட்கார்வதும் என இருந்தார். அதன் பின் நான் குளிக்க செல்கிறேன் என அவர் கூறி ஹோட்டல் அறை மூடிக் கொண்டார்.

மேலும் நீண்ட நேரம் ஆகியும் வராததால் நான் அழைத்து பார்த்தேன் சத்தம் இல்லை. எனவே ஹோட்டலில் இருக்கும் இன்னொரு சாவியை கேட்டு நானும் ஹோட்டலில் பணிபுரிபவர் ஒருவரும் அறைக்கு சென்றோம், அவர் தான் கதவை திறந்தார்.அவர் திடீரென அறை திறந்து பார்த்து கத்த நான் பின்னாடியே சென்று பார்த்தால் சித்ரா அந்த நிலையில் இருந்தார்.ஒன்றும் புரியாமல் அவரை கீழே இறக்கி முதல் உதவி செய்தோம் ஆனால் அவரது உயிர் பிரிந்துவிட்டது என கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement