பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனானது 84 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் மணிகண்டன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது அமுதவாணன், விக்ரமன், அசீம், ஏடிகே, ரச்சிதா, மைனா நந்தினி, ஷிவின், கதிர் என எட்டு போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றனர். இதனால் போட்டி சற்று வித்தியாசமான முறையில் கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
அதில் "என் கேள்விக்கு என்ன பதில்" என்ற தலைப்பில் போட்டி ஒன்று இடம்பெறுகின்றது. அதில் கேள்விகள் கேட்கப்படுகிறது. சம்மந்தமில்லாத வகையில் பதில் அளிக்கின்றார். அதாவது விக்ரமன் அமுதவாணனிடம் "இந்த வீட்டிற்குள் 21 பேர் வந்தார்கள்' என்கிறார். அதற்கு அமுதவாணன் தெரியாது என்கிறார். அமுதவாணனுக்கு பிடித்த கலர் என்ன என்கிறார், அதற்கு அமுதவாணன் "ஆமா" எனப் பதிலளிக்கின்றார்.
அதேபோல் கதிரவன் ஷிவினிடம் "உங்களுக்கு மேக்கப் பிடிக்குமா, சாப்பாடு பிடிக்குமா" எனக் கேட்கின்றார். இதற்கு ஷிவினும் சம்மந்தமில்லாத வகையில் பதிலளிக்கின்றார். இதனைக் கேட்டதும் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!