• Sep 20 2024

எனக்கும் சிம்புவுக்கும் இது தான் ஒற்றுமை- வெந்து தணிந்தது காடு திரைப்பட நடிகை அளித்த எஸ்க்ளுசிவ் பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!


சிம்பு நடிப்பில் இன்றைய தினம் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்று வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சித்தி இத்னானி என்பவர் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் நிலையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 


வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக நான் ஆடிஷனுக்கு சென்றபோது, சிம்புவும் உடன் இருந்தார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் என்னை பார்த்து, இந்த படத்தின் கதாநாயகின்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இப்பொழுது வரைக்கும் என்னால் நம்ப முடியவில்லை. பெரிய கதாநாயகரோட நானும் ஒரு பெரிய பேனர் படத்தில நடித்தது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது என்றார்.

மேலும் மற்ற எல்லாத் துறைகளில் இருக்குற மாதிரி கடினம் சினிமாத் துறையிலும் இருக்கு. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி வந்தால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைய முடியும். அதனால் சினிமாவில் என்னுடைய கடின உழைப்பு இருக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், தமிழ் இண்டஸ்ட்ரியில் முதல் நாள் முதல் ஷோ பார்க்கிறது ரொம்ப பிரமிப்பாக இருக்கும். அந்த நாளை ரசிகர்கள் ஒரு திருவிழா மாதிரி கொண்டாடுகிறார்கள். நான் நடிகை சமீரா ரெட்டி போல் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அவர் ஒரு நல்ல நடிகை. ஆனாலும் என்கிட்ட தனித்தன்மைகள் நிறைய இருப்பதாக நான் நம்புகிறேன் என்றார்.


அத்தோடு என்னோட அப்பா ஒரு வாய்ஸ் ஆர்டிஸ்ட். அவருக்கு மொழிகளின் மீது அதிக பற்று உண்டு. என்னையும் நிறைய உற்சாகப்படுத்துவார். என்னிடம் அவர் கூறுகையில், உன்னோட படத்திற்கு நீ டப்பிங் செய்தால் மட்டுமே உண்மையான எமோஷன் இருக்கும். அந்த காட்சியினுடைய எமோஷன் மத்தவங்கள விட உனக்குத்தான் நல்லா தெரியும்னு அப்பா சொல்வார். எனக்கு ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம், கொஞ்சம் தமிழ், தெலுங்கு என 5 மொழிகள் தெரியும் என்றார்.

மேலும் உங்களுக்கும், சிம்புவுக்கும் உள்ள ஒற்றுமை என்று கேட்ட போது  எனக்கும், எனது அம்மாவுக்கும் கன்னத்தில் குழி விழும். அது போல் நடிகர் சிம்புவுக்கும் கூட கன்னத்தில் குழி விழும். எனது அம்மா தான் என்னுடைய ரோல் மாடல். அவர் என்னிடம் கூறுகையில், நீ என்ன நினைக்கிறயோ அதை நூறு சதவீதம் சிறப்பாக செய். தப்புன்னா நான் உனக்கு சொல்றேன்னு அப்ப அந்த விஷயத்தை நீ மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் இன்னும் பல விடயங்களைக் கூறினார்.

Advertisement

Advertisement