தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துக்கொண்டிருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். நடிப்பிற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயங்காத நடிகர் தான் இவர்.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக திகழும் இவர் மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக கமலின் படம் வெளியாகாததால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர். அந்த வருத்தத்தை போக்க தற்போது கமலின் விக்ரம் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் ரிலீஸ் ஆன விக்ரம் பாடலில் கமல் 'ஒன்றியத்தின் தப்பாலே, ஒன்னுமில்லே இப்பாலே' என கமல் பாடினார். அது சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் ஒன்றிய அரசை குறை கூறுகிறார் என அவர் மீது போலீஸ் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்திருக்கும் பெட்டியில் 'ஒன்றியம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூறி இருகிறார்.
"பத்திரிகையாளர்கள் கூடினால் அது ஒன்றியம், தயாரிப்பாளர்கள் கூடி சங்கம் நடத்தினால் அது ஒன்றியம் தான்" என கமல் கூறி இருக்கிறார். மேலும் பெரிய சர்ச்சைக்கு கமல் கொடுத்த விளக்கம் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது.
பிறசெய்திகள்:
- மங்காத்தா ரோலில் மீண்டும் நடிக்கும் அஜித்- 61வது படத்திலிருந்து கிடைத்த புதிய மாஸ் அப்டேட்
- இரண்டு பாகங்களாக உருவாகும் வெற்றிமாறனின் திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
- கே.ஜி.எப் பட ஹீரோ யாஷின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?
- ‘என்னை மட்டும் எதற்கு கேட்கிறீங்க சிம்புவையும் கேளுங்க’- நடிகை ஸ்ரீநிதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
- kpy குரேஷியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…இதோ புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!