கன்னத்தில் முத்தமிட்டால் எனும் படத்தில் இடம்பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே...” என்ற பாடல் மூலம் சினிமாவிற்கு பின்னணி பாடகியாக அறிமுகமானவர் சின்மயி.இவர் அதனைத் தெடர்ந்து பல பாடல்களை பாடிதனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைகொண்டவர்.இவ்வாறுஇருக்கையில் இவர் சில காலத்திற்கு முன் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பணிப்போரே ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இவர் டப்பிங் சங்கத்தின் தலைவராக இருக்கும் ராதா ரவி மீது பலவிதமான குற்றசாட்டுகளை வைத்தார். அது பெரும் சர்ச்சையாக வெடித்து அதனை அதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் சங்கம் டப்பிங் யூனியன் தலைவராக நடிகர் ராதாரவி பொறுப்பு வகித்து வந்த ராதாரவி பாடகி சின்மயிவை அந்த சங்கத்தில் இருந்து நீக்கினார்.
இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் ராதா ரவி கொடுத்த பேட்டி ஒன்றில் இந்த விஷயம் பற்றி பேசியுள்ளார். செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்த ராதாரவி சின்மயின் டப்பிங் வாய்ப்பை பறித்துவிட்டீர்கள் என்ற குற்றசாட்டு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராதாரவி “டப்பிங் சங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்தால் சரியாக 31ஆம் தேதியன்று பணம் கட்ட வேண்டும் இது சங்கத்தின் விதிமுறை. இரண்டு வருடங்கள் காட்டவில்லை என்றால் அவர் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
சமீபாத்தில் கூட சூர்யா அவர்களை கூட 2 வருடம் பணம் காட்டவில்லை என்று நீக்க முடிவு செய்தனர். ஆனால் நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, அதற்க்கான காரணம். அவர் பெப்சிக்கு அதிகம் உதவி செய்தவர். ஏனெற்றால் பெப்சியில் தான் நாங்களும் வாழ்ந்தோம் அவர் கொடுத்த பணம் கண்டிப்பாக சில எங்களுக்கும் வந்திருக்கும். அதனால் தான் வந்த நன்றி உணர்வு காரணமாகத்தான் அவரை நிரந்தர உறுப்பினராக்க அவரிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்றார்.
ஆனால் சின்மயியை உறுப்பினராகத்தான் சேர்த்தோம், அவர் பணம் சரியாக காட்டவில்லை அதனால் அவரிடம் இருந்து டப்பிங் யூனியன் உறுப்பினர் பதவி போய்விட்டது. நீங்கள் யூனியனை மதித்தால் நாங்களும் மதிப்போம், இல்லையென்றால் உங்களுக்கும் மரியாதை கிடைக்காது.அத்தோடு மற்றவர்கள் சொல்வது போல தனிப்பட்ட முறையில் எல்லாம் எனக்கும் அவருக்கும் ஒன்றும் கிடையாது. அவர் என்ன என்னுடைய அத்தை பெண்ணா?, அவருக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாது.
என்னிடம் டப்பிங் யூனியனின் உறுப்பினராக சேர கேட்டனர், உறுப்பினராக சேர கையெழுத்து போட்டேன் அவ்வளவுதான். அதாவது டப்பிங் துறையில் பசித்த ஏப்ப காரர்கள், புளித்த ஏப்ப காரர்கள் என இரண்டு வகையினர் இருக்கின்றனர். அத்தோடு பல பசித்த ஏப்ப காரர்கள் இன்னும் வேலை கிடைக்காமல் இருக்கின்றனர். இவர்கள் புளித்த ஏப்ப காரர்கள் என்ற திமிரு. யூனியன் என்ன செய்யும் என்ற எண்ணம், இப்போது நீக்கியவுடம் பேசுகிறார்கள். ஆனால் பாடகராகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் சின்மயி சிறந்தவர் என்று தெரிவித்தார் ராதாரவி.
Listen News!