நகைச்சுவை நடிகரான நடிகர் கூல் சுரேஷ் சாக்லேட், சீறி, காக்க காக்க, இனிமேல் இப்படித்தான், நண்பேன்டா போன்ற படத்தில் நடித்துள்ளார்.
சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ், சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் பெயர் அறிவிப்பு வந்தவுடன் தீவிரமாக ப்ரோமோஷன் வேலையில் இறங்கினார். எந்த செய்தியாளர் சந்திப்புக்கு சென்றாலும், வெந்துதணிந்தது காடு..படத்திற்கு வணக்கத்தை போடு என அவர் செய்த புரோமோஷன் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடத்தே டிரெண்டானது. வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை அள்ளியது.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு, பத்து தல திரைப்படத்தில் நடித்துள்ளார்.அத்தோடு இத்திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்திற்கு செய்தது போலவே பத்து தல படத்திற்கும் ப்ரோமோஷன் செய்து வருகிறார். மேலும்,பத்து தல முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஹெலிகாப்டரில் வருவேன் என்று கூறியிருந்தார்.
படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளதால், வித்தியாசமாக படகில் பயணம் செய்து கொண்டே ஒரு சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், கூல் சுரேஷ் என்றாலே வித்தியாசமானவன் என்று மக்கள் மனதில் பதிந்து விட்டது இதனால் தான் இந்த பேட்டியையும் கடலில் பயணம் செய்து கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் என்றார்.
இதையடுத்து,செய்தியாளர் எப்போதும் சிம்பு, சிம்பு என்கிறீர்கள், சிம்புவை வைத்து நீங்கள் ஆதாயம் அடைவதாக மக்கள் நினைக்கிறார்கள் என்றார். இதற்கு பதிலளித்த கூல் சுரேஷ், சிம்புவால் எனக்கு எந்த படவாய்ப்பும் கிடைக்கவில்லை, சிம்புவால் எந்தவிதமான பரிசும் எனக்கு கிடைக்கவில்லை, சிம்புவால் எனக்கு கிடைத்தது எல்லாம் மக்களின் அன்புதான்.
பத்துதல இசைவெளியீட்டு விழாவிற்கு ஹெலிகாப்டரில் வருவேன் என்று சொல்வது எல்லாம் முட்டாள் தனமாக இருக்கு என்று செய்தியாளர் கூறியதால் ஆத்திரம் அடைந்த கூல் சுரேஷ், சிம்பு மீது வைத்திருக்கும் அன்பை சந்தேகப்படாதீங்க என்று நடுக்கடலில் குதித்துவிட்டார்.
இந்நிலையில் கடலில் குதித்ததற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.அதாவது தான் வேற ஒரு காரணத்திற்காக தான் கடலில் குதித்தேன்.இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு றிப்ஸ் எல்லாம் ஏத்திட்டு இப்ப தான் திரும்பி வந்தேன்.ஆனால் நான் சிம்புவின் ரசிகன் தான்.அதனால் பத்து தல படம் வெளியாகும் போது சிம்புவிற்கு பிடிக்காததை செய்யாதீங்க..நான் என்னால் உடம்பிற்கு முடியவில்லை என்றாலும் கண்டிப்பாக ஹெலிகாப்டரில் வந்து மலர் கொட்டுவேன்.என பதிலளித்துள்ளார்.
Listen News!