விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ள 11 போட்டியாளர்களின் இருந்து, யார் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற வாய்ப்புள்ளதென கணித்துள்ளனர்.
மேலும் கடந்த வாரம், ஸ்ட்ராங் போட்டியாளராக பார்க்கப்பட்ட விஜய் வர்மா யாரும் எதிர்பாராத விதமாக வெளியேறினார். இந்த சம்பவம் பிக்பாஸ் ரசிகர்களையே அதிர்ச்சியடைய செய்தது.
அந்த வகையில், இந்த வாரம் அக்ஷயா, விக்ரம், வினுஷா, ஜோவிகா, மணிச்சந்திரா, நிக்சன், யுகேந்திரன், விஷ்ணு, கூல் சுரேஷ், மாயா, பிரதீப்,என மொத்தம் 11 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி, இந்த வாரம் அதிக பட்சமாக 34.17 சதவீத வாக்குகளுடன் பிரதீப் முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரை தொடர்ந்து,நிக்சன் 12.64 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், நடன இயக்குனர் மணி சந்திரா 8. 59 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும், ஜோவிகா 7.97 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளதாக கூறப்படுகிறது
இவர்களைத் தொடர்ந்து கூல் சுரேஷ், விஷ்ணு, மாயா, யுகேந்திரன் ஆகியோர் உள்ளனர். அதே நேரம் டேஞ்சர் சோனில் வினுஷா, விக்ரம், அக்ஷயா ஆகியோர் காணப்படுகின்றனர்.
எனினும், கடந்த நாட்களில் நேர்த்தியாக விளையாடிய வினுஷா, வாக்குகளின் அடிப்படையில் கொஞ்சம் முன்னேறியுள்ளதால், தற்போது விக்ரம் மற்றும் அக்ஷயா ஆகிய இருவருமே கடைசி இடத்தில் உள்ளார்களென கூறப்படுகிறது.
அதேவேளை, இந்த வாரம் இரண்டு பேருக்கு ஏவிக்ஷன் நடக்கும் என்றால் விக்ரம் மற்றும் அக்ஷயா வெளியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், சிங்கிள் எவிக்ஷன் என்றால் அக்ஷயா வெளியேற்றப்படலாம் என நெட்டிசன்கள் கணித்து கூறி உள்ளனர்.
Listen News!