இளம் வயதிலேயே ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக 'வெள்ளை மனசு' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரம்யா கிருஷ்ணன் சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'படிக்காதவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தொடர்ந்து தமிழில் 'ஜல்லிக்கட்டு', 'முதல் வசந்தம்', 'பேர் சொல்லும் பிள்ளை', 'வானமே எல்லை' என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாகி, பல படங்களில் நடித்தார்.
ரஜினியுடன் நடித்த 'படையப்பா' படம் தான் மீண்டும் ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் கம்பேக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் 'பஞ்சதந்திரம்' படத்தில் வில்லி வேடத்தில் நடித்தார். 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் ராஜமாதா சிவகாமியாக வலம் வந்த அவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'குயின்' வெப் சீரிஸில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருந்தார்.
இதனை அடுத்து நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டையும் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார்.
அதில் படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடித்த தனது அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதாவது நீலாம்பரி என்றாலே திமிர் தானே அந்தப் படத்தில் நடிச்சது ரொம்ப பெருமையாகவே இருந்தது, ஆனால் அப்பிடி திமிர்தனமாக நடிக்கம் போது ஐயையோ என்ன நடக்கப்போகுதோ என்ற பயம் தான் அதிகமாக இருந்திச்சு. ஆனால் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த போதும் நிறைய ரெஸ்போன்ஸ் கிடைத்த போது தான் ரொம்ப சந்தோஷமாக இருந்திச்சு என்றும் தெரிவிததுள்ளார்.
Listen News!