விஜய் மற்றும் அஜித்தின் சம்பளம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.
விஜய் தற்போது வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றார். எனினும் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அத்தோடு இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது. எனினும் இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அத்தோடு நேர்கொண்டப்பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. எனினும் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.அத்தோடு இப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது. இதையடுத்து அஜித் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் துவங்கவுள்ளது
எனினும் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் இருவரும் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். அஜித் தான் அடுத்ததாக நடிக்கவுள்ள AK62 திரைப்படத்திற்கு 105 கோடி சம்பளமாக வாங்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. அத்தோடு விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்திற்காக 125 கோடி சம்பளமாக வாங்குகிறார். இதன் காரணமாக தமிழ் சினிமா வட்டாரங்களை சார்ந்த சிலர் விமர்சித்து வருகின்றனர். இவர்கள் வாங்கும் சம்பளத்தினால் தயாரிப்பாளர்கள் விழிபிதுங்கி நிற்பதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இப் படத்திற்க்கு படம் இவர்களின் சம்பளம் உயர்வதால் பல தயாரிப்பாளர்கள் அவஸ்தை படுவதாக சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் அஜித் மற்றும் விஜய்யின் சம்பளத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் வசூல் ரீதியாகவும், வியாபாரம் ரீதியாகவும் நல்ல லாபத்தை கொடுக்கின்றது. வசூல், டிவி மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ், ரீமேக் ரைட்ஸ் என அனைத்தையும் சேர்ந்து பார்த்தல் கிட்டத்தட்ட 300 கோடி வரை வியாபாரம் செய்கின்றது. எனவே 300 கோடி வியாபாரத்தை ஈட்டி கொடுக்கும் ஒரு நடிகருக்கு 100 கோடி சம்பளம் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. அத்தோடு அவர்களாக எனக்கு இவ்வளவு சம்பளம் கொடு என கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள் தான் அவர்களிடம் கால்ஷீட் கேட்கின்றனர் என்றார் ஆர்.கே.சுரேஷ்
Listen News!