தளபதி விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் வசூலை ‘தக்லைஃப்’ படத்தின் வியாபாரம் மிஞ்சி விட்டதாக தகவல் வெளியானதை அடுத்து வசூலில் நான் தான் கிங்கு என்று கமல்ஹாசன் மீண்டும் நிரூபித்துள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் படம் ‘தக்லைஃப்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி இடம் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தை வாங்க விஜய் டிவி ஒப்புக்கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ‘தக்லைஃப்’ படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை 63 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை ஏபி இன்டர்நேஷனல் மற்றும் ஹோம் ஸ்கிரீன் என்டர்டைன்மென்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து பெற்றுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லியோ படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை 60 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக கூறப்பட்ட நிலையில் ‘தக்லைஃப்’ படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை ரூ.63 கோடிக்கு விற்பனையாகி பின்னுக்கு தள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!