• Sep 20 2024

பிரமாண்டமாக நடைபெறும் திருச்சிற்றம்பலம் ஓடியோ வெளியீட்டு விழா..சந்தோஷத்தில் படக்குழுவினர்

tech / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக கலக்கி வருபவர் நடிகர் தனுஷ். மாறன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். முன்னணி இயக்குநர் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு அனிருத் இசையமைத்துள்ளார். அதனால் இந்த படத்தின் பாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தனுஷ் பாடிய தாய்க்கிழவி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் திகதி பிரமாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது

Advertisement

Advertisement