• Sep 20 2024

முப்பரிமாண புதுப்பொலிவுடன் வெளியாகவுள்ள "டைட்டானிக் 2 " திரைப்படம்- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கோலிவூட்டில் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்த திரைப்படம் தான் 'டைட்டானிக்". இப்படம் வெளியாகிய காலத்திலிருந்து இன்று வரையும் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் பலராலும் காதல் காவியமாக இப்படம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இப்படத்தில் லியானார்டோ டிகாப்ரியோ மற்றும் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்திருந்தனர். கண்மூடித்தனமான பிடிவாதம் மற்றும் அதன் கொடூரமான விளைவுகளைக் குறித்த ஒரு மறக்க முடியாத மனதை பிழியும் காதல் திரைப்படம் தான் டைட்டானிக் என இன்றும் பலர் வர்ணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பல ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் குவித்த இத்திரைப்படம் ரிலீசாகி 25-ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு அதன் புதுப்பிக்கப்பட்ட முப்பரிமாண பதிவை மீண்டும் திரை அரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அதாவது இப்புதுப்பிக்கப்பட்ட பதிவு அடுத்த வருடம் பெப்ரவரி 14-ஆம் திகதி காதலர் தினத்தன்று வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரொமாண்டிக் காதல் திரைப்படமான "டைட்டானிக்" படத்தினை மறுபடியும் புதுப்பொலிவில் பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement