இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம் தான் டைட்டானிக்.ஆடம்பரப் பயணிகளுக்கான டைட்டானிக் கப்பலில் அனைத்து வர்க்கத்தினரும் பயணிக்க, இதில் ஹீரோ ஹீரோயின்களுக்கு இடையில் ஏற்படும் காதலை மையப்படுத்தியே இந்தப் படம் எடுக்கப்பட்டது.
இப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.மேலும் இந்த டைட்டானிக் கப்பல் பயணித்துக் கொண்டிருக்கும் போது பனிப்பாறையுடன் மோதி கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் மூழ்க, உயிருக்கு உயிருக்கு போராடும் வேளையில் மனிதர்களுக்கு இடையில் நிகழும் பனிப்போர், மனமாற்றம், தடுமாற்றம், ஈகோ, வஞ்சம், நெகிழ்ச்சி, உறவு, காதல் என்பவற்றை இது எடுத்துக் காட்டுகின்றது.
1995 ஆம் ஆண்டில் உண்மையிலேயே மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலின் விபத்து சம்பவத்தில் பலியான ஆயிரக்கணக்கான பயணிகளின் சோகக் கதையை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டது.அக்கடமிக் ம்ஸ்டிஸ்லாவ் கெல்டிஷ் (Akademik Mstislav Keldysh) என்னும் ரஷ்ய ஆய்வுக் கப்பலில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இப்படம் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகி பல விருதுகளையும் குவித்தது.இந்நிலையில் இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.இதனை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்திலான அவதார் 2-ஆம் பாகமான அவதார் தி வே ஆஃப் வாட்டர் படம் அண்மையில் (டிச 16) வெளியாகி அனைத்து திரையரங்குகளிலும் ஒளிபரப்பாகி வருவதைக் காணலாம்.
Listen News!