காதலர் தினத்தை முன்னிட்டு ஹாலிவுட் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய டைட்டானிக் திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ் ஆக போவதாக இணையத்தில் தகவல் வெளியாகி பரவி வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் எத்தனையோ லவ் படங்கள் வந்தாலும், காலத்தால் அழியாத திரைப்படம் என்றால் அது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியாகி உலகெங்கிலும் மாபெரும் வெற்றியை தொட்ட ‘டைட்டானிக்’ தான். இப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அந்தவகையில் இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும்,வெற்றியையும் பெற்றது.
அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் பல விருதுகளை வாரிக் குவித்தது. அதன்படி சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை என 11 ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இப்படம் 2012ம் ஆண்டு 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. இப்படத்தில் காட்சிகள் அனைத்தும் கைக்கெட்டும் தூரத்தில் நிகழ்வது போலவே இருந்ததை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்த நிலையில் மீண்டும் இந்த திரைப்படம் 25 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் விதமாக மீண்டும் ரிலீசாக இருக்கிறது. அதாவது, டைட்டானிக் திரைப்படம் ‘ரீ மாஸ்டர்டு’ பதிப்பு ‘ 3D 4K HDR’ தொழில்நுட்பத்தில் 2023-ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வார இறுதி நாளான பிப்ரவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தகவல் குறித்து அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.
Listen News!