• Sep 21 2024

அஜித்தின் AK61 படத்தின் தலைப்பு வெளியானது..குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் AK61 படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். வலிமை திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பைக் ரேசிங் மற்றும் பைஃட் சீன்ஸ் எல்லாம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.



இதனை அடுத்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் இயக்கத்தில் AK61 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பித்தது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் விரைவில் தொடங்கவுள்ளது.அஜித் தற்போது பைக் ரைடு முடிந்து படப்பிடப்பில் பங்கேற்கவுள்ளார்.



இந்நிலையில் அப்டேட் கேட்டு வரும் ரசிகர்களுக்கு "துணிவே துணை" என்ற படத்தின் தலைப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.விரைவில் அதிகார்புர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement