• Nov 19 2024

சமநிலையில் இருக்க, நீங்கள் நகர வேண்டும் - கடுமையாக ஒர்க்கவுட் செய்யும் ஜோதிகா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா, கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

திருமணத்துக்கு பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்ட நடிகை ஜோதிகாவுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் பிறந்தனர். இதையடுத்து குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் தன் செகண்ட் இன்னிங்சை தொடங்கினார் ஜோதிகா.


அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்த அவர், அதன்பின் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

 அதுமட்டுமின்றி நடிகர் சூர்யா உடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வரும் ஜோதிகா, அதன்மூலம் பல்வேறு தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் அண்மைக்காலமாக ஒர்க்கவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா தற்பொழுது கடுமையான ஒர்க்கவுட் செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement