• Sep 21 2024

இன்று இந்த நாள் ஒரு மிகப்பெரிய நாளாகும், நான் எனது வாமியை அழைத்துச் செல்கின்றேன், வைரலாகும் புகைப்படங்கள்.

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

அனுஷ்கா ஷர்மா ஹிந்தி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான இவர் 2012 முதல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் செலிபிரிட்டி 100 லிஸ்டில் இடம்பிடித்தார் 


இவர் ரப் நே பனா தி ஜோடி  இல் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மற்றும் யாஷ் ராஜ் பிலிம்ஸின் காதல் திரைப்படங்களான பேண்ட் பாஜா பாராத்  மற்றும் ஜப் தக் ஹை ஜான் ஆகியவற்றில் நடித்ததன் மூலம் முக்கியத்துவம் பெற்றார். ; பிந்தைய திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.


க்ரைம் த்ரில்லர் NH10 , மற்றும் தில் தடக்னே தோ, ஏ தில் ஹை முஷ்கில்  மற்றும் சுய் தாகா ஆகிய திரைப்படங்களில் சிறந்த பெண் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர்  பாராட்டுகளைப் பெற்றார். விளையாட்டு நாடகம் சுல்தான், ராஜ்குமார் ஹிரானியின் மத நையாண்டி பிகே  மற்றும் வாழ்க்கை வரலாறு சஞ்சு ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்ததுடன் இந்த திரைப்படங்கள் வசூலில் அதிக சாதனை படைத்த திரைப்படங்களாக கொள்ளப்படுகின்றன. 

அதுமட்டுமல்லாது தற்போது இவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆகிய சக்தா எக்ஸ்பிரஸ் படத்திற்காக தயாராகி வருகிறார். பிஸியான சூட்டிங் அட்டவணைகளிகடையில் சுவாரசியமான புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் புகைப்படத்தில் அவர் தனது நேரத்தை பூங்காவில் செலவழிப்பதுடன் படத்தில் அவர் நீல நிற டெனிம் சூட் அணிந்து மகிழ்ச்சியாக இருப்பதை காணலாம்.

மேலும் அந்த பதிவில் அவர் தனது ஓய்வு நேரத்தை தனது மகளுடன் கழிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது வெள்ளைச் ஸ்நீகரையும் காலில் அணிந்திருப்பதை காணலாம். இவரால் வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதனைக் காணலாம்.



Advertisement

Advertisement