சன் டிவியில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிய வண்ணம் இருக்கின்றன. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
அதில் ஸ்வேதாவிடம் அம்மா "விக்கி விஷயத்தில் நீ கன்ட்ரோல் இல்லாமல் போய்க்கிட்டு இருக்காய், உன்னால விக்கி இல்லாமல் வாழவே முடியாதா?" எனக் கேட்கின்றார். அதற்கு ஸ்வேதாவும் " முடியாதம்மா"என எதிர்த்துக் கூறுகின்றார்.
மறுபுறம் விக்கி அஞ்சலியிடம் "என்ன நடந்திச்சு என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்" எனக் கேட்கின்றார். அதற்கு அஞ்சலி "ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது, உங்களுக்கும் எனக்கும் ஒத்தே வராது" என விக்கியின் முகத்தில் அறைந்தால் போல் கூறுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.
Listen News!