சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரும் தொழில் அதிபருமான லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் தான் தி லெஜண்ட் படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை ஆட்டம்போட வைத்துள்ளது. அத்தோடு, டீசர் யூடியூபில் பல லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
லெஜண்ட் சரவணன் இப்படத்தில் ஒரு விஞ்ஞானியாக நடிக்கிறார். ஊர்வசி ரவுத்தேலா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா முதன் முதலாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகிலுள்ள இப்படத்தில் நாசர், சுமன், பிரபு, விவேக், ரோபோ ஷங்கர், சச்சு,யோகி பாபு, மயில்சாமி, மன்சூர் அலிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
அத்தோடு நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'தி லெஜண்ட்' 2500 திரைகளை ஆக்கிரமித்துள்ளது, அதே நேரத்தில் தமிழ்நாட்டின் 800 திரையரங்கில் வெளியாக உள்ளது.
மேலும் இப்படத்திற்கு நேற்று முன்தினம் முன்பதிவு தொடங்கிய நிலையில், முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே 650க்கும் அதிகமான திரையரங்கில் ஹவுஸ்புல்லாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை 28ந் தேதியான நாளை படம் வெளியாகவுள்ள நிலையில், முதல் நாள் முதல் காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு முக்கிய நகரங்களில் 4 மணி மற்றும் 5 மணிக்கான காட்சிகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளைப் பெற்ற முதல் அறிமுக நடிகர் என்ற பெருமையைப் சரவணன் பெற்றிருக்கிறார்.
காதல், நகைச்சுவை, ஆக்ஷன், ரொமான்ஸ் திரைப்படமான லெஜெண்ட் படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. அத்தோடு, இப்படம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் ஓடக் கூடியதாக தி லெஜெண்ட் திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது. துபாய், மும்பை, கொச்சி, பெங்களூர், ஹைதராபாத் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்களை சந்தித்து படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் சரவணன்.
Listen News!