• Nov 10 2024

4 முன்னணி நடிகைகளுடன் ரிலேஷன்சிப்பில் இருந்த டோனி- அட இவங்களையும் காதலித்தாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர் தான் தோனி. கூல் கேப்டன் என்று பெயர் எடுத்த இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்ததில் இருந்து அவரை தமிழக மக்கள் அன்போடு தல என்று அழைத்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் தோனி வாழ்வில் வந்த காதல்கள் பற்றி பேசப்படுகிறது. அதாவது இவர் திருமணத்திற்கு முதல் 4 நடிகைகளைக் காதலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும், தோனியும் காதலித்தார்களாம். தீபிகா மீது பைத்தியமாக இருந்தாராம் தோனி. தீபிகாவின் பெயர் யுவராஜ் சிங்குடன் சேர்ந்து அடிபடத் துவங்கியதும் அவரிடம் இருந்து தள்ளியே இருக்க முடிவு செய்தாராம்.

இதனைத் தொடர்ந்து தமிழ், மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த அசினுக்கும், தோனிக்கும் இடையே காதல் என்று கூட பேசப்பட்டது. ஒரு பிராண்டின் அம்பாசிடராக ஆனபோது அவர்களுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டதாம். 2010ம் ஆண்டு அசின் வீட்டிற்கு தோனி சென்றதை பார்த்திருக்கிறார்கள்.

அசினும், தோனியும் அதே ஆண்டு பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து 2010ம் ஆண்டு ஜூலை மாதம் சாக்ஷியை திருமணம் செய்து கொண்டார். மேலும் 2008ம் ஆண்டு நடிகை ராய் லட்சுமியுடன் தோனியின் பெயர் அடிபட்டது. இருவரும் ஜோடியாக பார்ட்டிகளுக்கு சென்றார்கள். 2009ம் ஆண்டு தோனியும், ராய் லட்சுமியும் பிரிந்துவிட்டார்களாம்.

இது தவிர டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளரான ப்ரீத்தி சிமோஸும், தோனியும் ஒரு காலத்தில் காதலித்ததாக பேசப்பட்டது. ப்ரீத்தியும், தோனியும் நல்ல நண்பர்கள். கடந்த 16 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதனால் தான் ப்ரீத்தியுடன் தோனியின் பெயர் அடிபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தமிழ் டீசரை வெளியிடவுள்ள நடிகர் யார் தெரியுமா?- அட இது நம்ப லிஸ்ட்லிலையே இல்லையே

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement