தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அங்கு முன்னணி நடிகைகளாக ஜொலித்து வரும் கதாநாயகிகள் அனைவருமே தங்களது சம்பளத்தை உயர்த்திய வண்ணம் தான் இருக்கின்றார்கள். இந்நிலையில் இவர்கள் வாங்கும் சம்பளம் குறித்து டாப் 10 லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.
அந்தவகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். மேலும் இவர் கைவசம் தற்போது 'இறைவன், கனெக்ட், நயன்தாரா 75, ஜவான்' ஆகிய படங்கள் உள்ளன.
அடுத்ததாக சமந்தா ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'யசோதா' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று குந்தவையாக பொன்னியின் செல்வனில் நடித்து மக்கள் மனதில் நிறத்தனமான இடத்தை பிடித்துள்ள நடிகை திரிஷா ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.
மேலும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகும் ஒரு சில படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவினாலும், மார்க்கெட்டை இழக்காமல் இருக்கும் இவர் ரூ. 4 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.
அதிக ரசிகர்களைக் கொள்ளை கொண்ட காஜல் அகர்வால் திருமணமாகி குழந்தை பெற்ற பின்பும் தற்போது இந்தியன் 2வில் பிசியாக நடித்து வருகின்றார். இவர் ரூ.4 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.
அத்தோடு கார்கி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் சிறந்த கம் பேக் கொடுத்த நடிகை சாய் பல்லவி ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'மாவீரன்' படத்தில் நடிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களை போலவே நடிகை ஆண்ட்ரியா ஜெறேமியா கதையின் நாயகியாக இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் ரசிகர்களை அதிகமாக கவருகிறது. அந்தவகையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த 'அனல் மேலே பனித்துளி' என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.
மேலும் 'திருச்சிற்றம்பலம்' என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை நித்யா மேனன் ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம்பெற்றுள்ள பிரியங்கா மோகன் ரூ.1 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.
Listen News!