• Sep 20 2024

TRP ரேட்டிங்கில் இடம்பிடித்த டாப் 10 சீரியல்கள்! அடிமட்டத்தில் விஜய் டிவியின் முக்கிய சீரியல்?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் அடிப்படையில் டாப் 10 இடங்களை பிடித்த தொடர்கள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, டிஆர்பி ரேட்டிங்கில் முன்னனி வகிக்கும் சேனல்கள் புகழை பெறுவதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கு அதிக தொகையினை விளம்பரதாரர்களிடமிருந்து பெற முடியும். இதற்காகத்தான் போட்டிபோட்டுக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன. 


அந்தவகையில் இல்லத்தரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை, தினம் தோறும் பார்த்து ரசிக்கப்பட்டு வரும், சீரியல்களில் இந்த வருடத்தின் 51-ஆவது வாரத்தில், டாப் 10 ரேட்டிங்கை கைப்பற்றிய சீரியல்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

அதன்படி, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரமும் முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. கயல் சீரியல் கடந்த வாரமும் இந்த வாரமும் இரண்டாவது இடத்திலையே காணப்படுகின்றது.


மூன்றாவது இடத்தில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலும், நான்காவதாக எதிர்நீச்சல் சீரியலும் காணப்படுகின்றது.

இதை தொடர்ந்து, வானத்தைப்போல சீரியல், இனியா சீரியல், ஆனந்த ராகம் சீரியல் ஆகியவை ஐந்து, ஆறு, ஏழு ஆகிய இடங்களை வரிசையாக பெற்றுள்ளது.


அதேவேளை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை எட்டாவது இடத்திலும், பாக்கியலட்சுமி சீரியல் ஒன்பதாவது இடத்திலும் காணப்படுகின்றது.

அத்துடன், இறுதியாக பத்தாவது இடத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement