2023 ஆண்டு துவங்கி அதற்குள் 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஜூலை மாதத்திலும் பாதி மாதம் கடந்துள்ளது.இந்த 6 மாதங்களில் தமிழ் சினிமாவில் அதிகமான படங்கள் ரிலீசாகியுள்ளன. அடுத்தடுத்த சிறப்பான படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
ஜனவரி முதல் தற்போது வரை முன்னணி நடிகர்களின் படங்கள் அதிகமாக வெளியாகியுள்ளன. லோ பட்ஜெட் படங்களும் ரசிகர்களை அதிகமாக ஈர்த்து வெற்றிப் பெற்றுள்ளன.
பொங்கல் ரிலீசாக கடந்த ஜனவரியிலேயே விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு அஜித்தின் படம் வெளியானன நிலையில் பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்டு விஜய்யின் வாரிசு படம் ரிலீசானது. இந்த இரு படங்களும் ரசிகர்களை ஏமாற்றாமல் ஹிட் கொடுத்துள்ளன.வாரிசு படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்தப்படமும் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்யின் லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலையில், தற்போது படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளதாக லோகேஷ் அப்டேட் தெரிவித்துள்ளார். படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் மட்டுமில்லாமல் லவ் டுடோ, குட் நைட், போர் தொழில் போன்ற லோ பட்ஜெட் படங்களும் மிகச்சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பிடித்துள்ளன. இந்நிலையில் கடந்த 6 மாதங்களில் ஓபனிங் நாளில் அதிக வசூலை பிடித்த 5 படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அஜித்தின் துணிவு படம் முதல் இடத்தில் உள்ளது. இந்தப் படம் ஓபனிங் நாளில் 24.59 கோடி ரூபாய்களை வசூலித்திருந்தது.
அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 படம் 21.37 கோடி ரூபாய் வசூலுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. விஜய்யின் வாரிசு படம் அதிகமான வசூலை மொத்தத்தில் ஈட்டியுள்ள போதிலும் ஓபனிங் நாளில் 19.43 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்து 3வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. நேற்றைய தினம் வெளியாகியுள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் 7.61 கோடியையும் உதயநிதியின் நடிப்பில் வெளியான மாமன்னன் படம் 7.12 கோடியையும் வசூலித்து 4வது மற்றும் 5வது இடங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!