கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் ரசிகர்களைக் கவர்ந்த படம் என்றால் அது சமீபத்தில் வெளிவந்த 'லவ் டுடே' படம் தான். இப்படத்தை 'கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி இதில் நடித்தும் இருக்கிறார். மேலும் லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறிப்பாக டீன் ஏஜ் ரசிகர்களுக்கு அதிகரித்து வந்தது.
அதாவது செல்போன் மாறிய பிறகு அவர்களின் காதல் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும். நவம்பர் 4-ஆம் தேதி வெளியான இத்திரைப்படமானது முதல் நாளில் பெரிதாக கலெக்சன் எதுவும் இல்லை. ஆனால் பின்பு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கொடுத்த நல்ல விமர்சனத்தை அடுத்து, அதிகமான திரையரங்கில் படம் திரையிடப்பட்டன.
இந்நிலையில் தற்போது இப்படமானது பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அந்தவகையில் இப்படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்து சில நாட்களிலேயே எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கப்போடு போட்டு வருகின்றது.
அந்தவகையில் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் தரமான வசூல் செய்து வரும் லவ் டுடே, இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 55 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதுமட்டுமல்லாது உலகம் முழுவதும் இதுவரை 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு வெறும் பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான லவ் டுடே 70 கோடி வசூலை கடந்துள்ளது கோலிவுட் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்தோடு தொடர்ந்து லவ் டுடே படத்திற்கு ஏராளமான ரசிகர்களிடம் இருந்து அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதால் இன்னும் ஒரே வாரத்தில் 100 கோடியைத் தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முன்னணி ஹீரோக்களின் படங்களே தடுமாறும் நிலையில் லவ் டுடே வசூலில் சாதனை படைத்துள்ளமை தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.
Listen News!