• Sep 21 2024

ப்ளூ உடையணிந்து ஓவர் கவர்ச்சி காட்டும் டாப்ஸி… ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் உள்ள பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் நடிகை மட்டுமன்றி சிறந்த மாடலும் கூட. அதாவது 2008-ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கு பற்றி அதில் பட்டத்தையும் வென்றார். அத்தோடு அதே போட்டியில் 'ஃபெமினா, ஃபிரெஷ், ஃபேஸ்' உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றிருக்கின்றார்.

டாப்ஸி திரையுலகினுள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு சுமார் ஆறு மாதங்கள் மென்பொருள் பொறியாளராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமன்றி ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கின்றார். மற்ற நடிகைகளைப் போல் அல்லாது இவர் வித்தியாசமான கதை அம்சங்கள் நிறைந்த படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவது வழமை.

அந்த வகையில் நடிகை டாப்ஸி தற்போது ‘சபாஷ் மிது’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படமானது இந்திய பெண்கள் கிரிக்கெட்டை மாற்றியமைத்த, இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸியமான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக இன்றுவரை பல படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்ற நடிகை டாப்ஸி எப்போதுமே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது கவர்ச்சிகரமான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை இணையத்தில் வெளியிட்டும் வருவார். இதேபோன்றே சமீபத்தில் இவர் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் இவர் நீல நிற ரவுஸர் மற்றும் மேலாடை அணிந்து ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement