விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, இசையமைத்து, எடிட் செய்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் பல படங்களை காப்பியடித்து எடுத்தது போல உள்ளதாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கடுமையாக தாக்கி உள்ளார்.
பிச்சைக்காரன் 2 படத்திற்கு சமூக வலைதளங்களிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நெகட்டிவ் விமர்சனங்களே குவிந்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் என்ன சொன்னார் என்பது குறித்து பார்ப்போம்.
கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய பிச்சைக்காரன் 2 திரைப்படம் அதிலிருந்து தப்பித்து ஒருவழியாக ரிலீஸ் ஆன நிலையில், ஏகப்பட்ட கதைகளின் காப்பி என்றே ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் பிச்சைக்காரன் 2 படத்தை பிரித்து மேய்ந்துள்ளார்.
மெடிக்கல் மாஃபியாவில் ஆரம்பித்து, ஆள் மாறாட்டக் கதைக்கு சென்று, தங்கச்சி பாசத்துக்காக பாசமலர் படத்தை சுட்டு, பழிவாங்கும் கதையாக மாறி, ஏழைகளுக்கு குறைந்த விலையில் பல விஷயங்களை கொடுக்கும் சிவாஜியாக மாறி கடைசியில் அந்நியன் போல எல்லா தப்புக்கும் நான் தான் காரணம் என கோர்ட்டில் விஜய் ஆண்டனி பேசுவது படம் பார்க்க சென்ற ரசிகர்களை கண்கலங்கி அழ வைத்து விடுகிறது என டோட்டல் டேமேஜ் செய்து விட்டார்.
பிச்சைக்காரன் 2ன்னு சொல்லிட்டு இப்படி 21 பாகங்களை உள்ள வச்சிருக்கீங்களே விஜய் ஆண்டனி என்றும் பல ஜானர்களை ஒரு படத்தில் வைக்க வேண்டும் என்கிற முயற்சியில் விஜய் ஆண்டனி வெற்றி பெற்று விட்டார். ஆனால், படம் பார்க்க சென்ற நம்ம கதி தான் அதோகதி என கலாய்த்துள்ளார்.
கதை ஒரே ட்ராக்கில் செல்லாமல் பல விதமாக டீவியேட் ஆகி பார்க்கும் ரசிகர்களை பாடாய்ப்படுத்தி விட்டது. அதிலும், எந்த ஒரு சீனும் உருப்படியாக எடுக்கவில்லை என இயக்குநர் விஜய் ஆண்டனியை விளாசி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
பிச்சைக்காரன் ஹிட் அடித்த நிலையில், அதே பெயரை வைத்து பிசினஸ் பண்ண முடிவு செய்து விட்டார் விஜய் ஆண்டனி என்றும், அந்த படத்துக்கு ரிக்ஷாக்காரன் என பெயர் வைத்திருந்தால் இந்த படத்துக்கு ரிக்ஷாக்காரன் 2 என வைத்திருப்பார் என மரண பங்கம் பண்ணி உள்ளார்.
Listen News!