மணிப்பூரில் 2 சமூகத்தினரிடையே நடந்து வரும் கலவரத்தில், நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கடந்த மே 4ந் தேதி மைத்தேயி இன இளைஞர்கள் குக்கி பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணமாக்கி, இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணமாக்கி அழைத்து சென்ற விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க சிறிது கால அவகாசம் கொடுப்போம் என்றும், இல்லையெனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் தலைமை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இப்படியான நிலையில் இந்த செயலுக்கு எதிராக திரையுலகப் பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடிகை ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சரத்குமார், சீரியல் நடிகை ஹேமா,ஸ்ரீதேவி ஆகியோரது பதிவு இதில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!