திரையுலகிற்கும் கவர்ச்சி நடிகைகளுக்கும் நீண்ட பந்தம் உண்டு. அதிலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகை மும்தாஜ்.
மும்பையை பூர்வீகமாகக் கொண்ட நக்மா கான் எனும் இயற்பெயரை கொண்ட மும்தாஜுக்கு பள்ளி படிக்கும்போதே சினிமா மீது ஆர்வம் வந்துவிட்டது. மேலும் அவரது வீட்டின் அறை முழுவதும் நடிகை ஸ்ரீதேவியின் போஸ்டர்களே இடம்பெற்றிருக்கும்.
அத்தோடு திரையுலகில் முயற்சித்த மும்தாஜுக்கு 1996ஆம் ஆண்டு திலீப்குமாருடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. இதனையடுத்து நடிப்பு பயிற்சி பெற்ற அவருக்கு சேத்தன் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சேத்தன் ஆனந்த் இறந்துவிட்டதால் அந்தப் படமும் கைவிடப்பட்டது.
இதனையடுத்துதான் டி.ராஜேந்தர் 1999ஆம் ஆண்டு மோனிசா என் மோனலிசா படத்தை ஆரம்பித்தார். புதுமுகங்களை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் டிஆருக்கு எழ மும்பை சென்று மும்தாஜை புக் செய்தார். எனவே தமிழ் படம் மூலம் மும்தாஜ் திரையுலகுக்கு அறிமுகமானார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி மோனிசா என் மோனாலிசா படம் வெற்றியடையவில்லை.இப் படம் வெற்றியடையாவிட்டாலும் மும்தாஜின் அழகில் ரசிகர்கள் சொக்கிப்போயினர்.
மோனிசா என் மோனாலிசா படத்துக்கு பின்னர் சத்யராஜ் நடித்த மலபார் போலீஸில் நடித்தார் மும்தாஜ். அந்தப் படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.மேலும் இப்படிபட்ட சூழலில் தெலுங்கில் ஒரு படத்தில் பாடலுக்கு மட்டும் நடனமாடிய அவர் மலையாளத்தில் நான்சி பரேரா படத்தில் நடித்தார். அதனையடுத்து தமிழில் உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். இப்படி 1999ஆம் ஆண்டு அவருக்கு ஒரு போராட்ட ஆண்டாகவே அமைந்தது.
மேலும் இப்படி நிலையான இடத்துக்கு போராடிக்கொண்டிருந்த மும்தாஜுக்கு குஷி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மும்தாஜ். இப் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், 'கட்டிப்பிடி கட்டிப்பிடிடா'பாடலுக்கு விஜய்யுடன் அவர் போட்ட நடனத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களும் விழுந்துவிட்டனர். அதனையடுத்து தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தும், ஒரு பாடலுக்கு நடனமாடியும் பிஸியாகவே வலம் வந்தார் மும்தாஜ். காலப்போக்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தமிழில் கடைசியாக லாரன்ஸுடன் ராஜாதிராஜா படத்தில் நடித்திருந்தார்.
இப்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் இருக்கும் மும்தாஜ் முதல் படத்தின்போது இரண்டு மணி நேரம் அழுதிருக்கிறார். அதாவது, டி.ராஜேந்தர் இயக்கிய மோனிசா என் மோனாலிசா படத்தில் மும்தாஜ் நீச்சல் உடையில் நடித்த காட்சி ஒன்று இருக்கும். அத்தோடு அந்தப் படத்தில் நடிக்கும்போது மும்தாஜுக்கு 16 வயதுதானாம். முதல் படத்திலேயே எப்படி எப்படி நீச்சல் உடையில் நடிப்பது அதுவும் 16 வயதில். எத்தனை பேர் பார்ப்பார்கள் என யோசித்து மேக்கப் ரூமில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அழுதாராம் மும்தாஜ்.
இதை தெரிந்துகொண்ட படத்தின் இயக்குநர் டி.ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி உஷா ஆகிய இருவரும் மும்தாஜிடம் சென்று, ‘எதற்காக அழுகிறாய். நீ ஒரு நடிகை. இது சாதாரண விஷயம்தான்" என சமாதானப்படுத்தினார்களாம்.இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரையும் அனுப்பிவிட்டு டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா, படத்தின் கேமராமேன் ஆகிய மூன்று பேர் மட்டுமே இருந்து மும்தாஜ் நீச்சல் உடையில் வரும் சீனை ஷூட் செய்தார்களாம். அப்போதுதான் மும்தாஜுக்கு நிம்மதி வந்ததாம். இந்தத் தகவலை மும்தாஜ் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார்.
Listen News!