• Sep 20 2024

கேரளாவில் கட்டா குஸ்தி படத்துக்கு நேர்ந்த சோகம்!- சொந்த ஊரிலேயே மார்க்கெட் இல்லையா?- அதிர்ச்சியில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் கட்டா குஸ்தி . இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸான இந்த படம் அதன் பின்னர் பார்வைகளைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள விஷ்ணு விஷால் இந்த படத்தின் வியாபாரம் 30 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 


ஆனால் கேரளாவில் மட்டும் படம் சுத்தமாக வரவேற்பைப் பெறவில்லையாம். இத்தனைக்கும் படத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கேரளாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தவிர ஐஸ்வர்யா லக்ஷ்மி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement