• Sep 20 2024

செம த்ரில்லிங் மற்றும் விறுவிறுப்பு நிறைந்த விக்டிம் வெப் சீரியலின் ட்ரெய்லர்-நடிப்பில் மிரட்டி எடுக்கும் அமலாபால்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரைப்படங்களுக்கு ஈடு கொடுக்கும் விதமாக செம த்ரில்லிங், விறுவிறுப்பு நிறைந்த வெப் சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. ஹிந்தியில் மட்டுமே ஒளிபரப்பான வெப் சீரியல்கள் தற்பொழுது பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது.

அந்த வகையில் சமீபத்தில் தமிழில் வெளிவந்த சுழல்,வெப் சீரியல் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.இதன் அடுத்த பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள Victim - Who is Next வெப்சீரிசின் டிரைலர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.தமிழில் உருவாக்கப்பட்டுள்ள ஆந்திராலஜி தான் Victim - Who is Next. நான்கு டைரக்டர்கள், நான்கு கதைகள் என உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிசின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

பிரசன்னா, அமலா பால், பிரியா பவானிசங்கர், நட்டி நடராஜ், தம்பி ராமைய்யா, நாசர், கலையரசன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இந்த ஆந்திராலஜி சோனி லைவ் தளத்தில் ஆகஸ்ட் 5 ம் தேதி வெளியிடப்பட உள்ளது

https://twitter.com/SonyLIV/status/1549264809379909632

தனியாக இருக்கும் பிரியா பவானிசங்கரை ஒரு உருவம் துரத்துவது, பிரசன்னாவின் மிரட்டலால் பயந்து நடுங்கும் அமலா பால், விவசாயியாக வரும் குரு சோமசுந்தரம், மர்ம புத்தகம் ஒன்றை படிக்கும் தம்பி ராமையா முன், அந்த புத்தகத்தில் இருக்கும் ஒரு கேரக்டரான நாசர் நேரில் வருவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. யார் இவர்கள், என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை ரசிகர்கள் மனதில் இந்த ட்ரெய்லர் உருவாக்கியுள்ளது எனலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement