'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்துள்ள திரைப்படம் தான் லத்தி. இத் திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார்.இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுஜைனா நடித்திருக்கின்றார்.
இப்படத்தினை 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. அத்தோடு அண்மையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது.
இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த நிலையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் விஷால் கலக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!