தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பல இயக்குநர்கள் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் எஸ்.ஜே சூர்யா. இவர் வாலி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதையடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்கியதோடு பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கின்றார். சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்பொழுது மீண்டும் ரி என் ரி கொடுத்து நடித்து வருகின்றார்.
அந்த வகையில் இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியாக மாநாடு திரைப்படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்திருந்தார். மேலும் இப்போது எஸ் ஜே சூர்யா ஹீரோ, வில்லன் என வித்தியாசமாக கலந்துகட்டி நடித்து கலக்கி வருகிறார்.
அவர் நடிப்பில் டான், பொம்மை, கடமையை செய், இரவான் ஆகிய படங்கள் ரிலீஸூக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் வில்லனாக அவர் நடித்துள்ள டான் படத்தின் ட்ரெய்லரும், ஹீரோவாக நடித்துள்ள கடமையை செய் படத்தின் ட்ரெய்லரும் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து ரிலீஸாக இருப்பதால் அவர் செம குஷியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு நாள் குறிச்சாச்சு- எந்த கோயிலில் திருமணம் தெரியுமா?
- Kgf2 திரைப்படத்தின் முக்கிய நடிகர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்
- AK61 திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- படத்திற்காக இது உருவாக்கப்பட்டதா?
- மீண்டும் தேசிய விருதுக்கு தயாரான கீர்த்தி சுரேஷ்- சாணிக்காயிதம் படத்தை பார்த்து பாராட்டி வரும் ரசிகர்கள்
- சினிமாவில் உள்ள இரண்டு ‘டான்’ களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்-புகழ்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்
- அட்டைப் படத்திற்காக எல்லை மீறி போஸ் கொடுத்த நடிகை சமந்தா- குவியும் லைக்குகள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!