• Nov 17 2024

6வது நாளாக தொடரும் தீவிர சிகிச்சை! விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வைத்தியர்கள் சொன்ன குட் நியூஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா வரலாற்றில் இருந்து அழிக்கமுடியாத மாபெரும் நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அரசியலில் களமிறங்கிய பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

அதன்பின், முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்து துவங்கிய விஜயகாந்த் மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதன்பின், உடல்நலம் சரியில்லாமல் போக தற்போது முழுமையாக மருத்துவ கவனத்தில் இருந்து வருகிறார். 

இதை தொடர்ந்து, 71 வயதாகும் நடிகர் விஜயகாந்த் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணாமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், ஆறாவது நாளாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவை ஏற்படும் போது செயற்கை  சுவாசம் வழங்கப்பட உள்ளதாக குறித்த மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.

அத்துடன், தற்போது அவரது உள்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், எனினும் மேலதிகமான மருத்துவ  சிகிச்சைகளை வழங்குவதற்கு வைத்தியர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


 

Advertisement

Advertisement