• Sep 20 2024

த்ரிஷா மற்றும் ஷோபிதாவின் கலக்கல் நடனம்.. பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த லிரிக்கல் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிய திரைப்டம் தான் பொன்னியின் செல்வன்.இந்தப் படமானது வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் டீசர் ட்ரெய்லர் என்பன அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இந்த படத்தின்  அனைத்து பாடல்களும் ஏற்கனவே வெளியாகி உள்ளது.


இதில் பொன்னி நதி  மற்றும் சோழா சோழா பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இவை தவிர ராட்சஸ மாமனே , சொல்  , தேவராளன் ஆட்டம் ,  அலை கடல் ஆகிய பாடல்களும் வெளியாகி உள்ளன.இதில் சொல் பாடலை ரக்ஸிதா சுரேஷ் பாடியுள்ளார். 

கிரித்திகா நெல்சன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த சொல் பாடலின் லிரிக் வீடியோ நேற்றைய தினம் வெளியாகி உள்ளது. த்ரிஷா & ஷோபிதா துலிபாலா ஆகியோர் இணைந்து இந்த பாடலுக்கு நடனம் ஆடும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.


இந்த பாடல் பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது  எனலாம்.






Advertisement

Advertisement