நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படம் ஹிட் ஆன பிறகு மீண்டும் முன்னணி ஹீரோயினாக பார்முக்கு வந்திருக்கிறார். அவர் தற்போது விஜய் ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது த்ரிஷாவுக்கு 40 வயதாகும் நிலையில் அவருக்கு எப்போது திருமணம் என்று தான் தொடர்ந்து எல்லோரும் கேட்டு வருகிறார்கள். அது ஒரு புறம் இருந்தாலும் த்ரிஷா இந்த வயதிலும் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என பலரும் ஆச்சரியமாக கேட்பதும் உண்டு.
இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவை கலக்கிவரும் 19 வயது நடிகையான க்ரித்தி ஷெட்டி அளித்திருக்கும் பேட்டியில் தனக்கு த்ரிஷா தான் favourite ஹீரோயின் என கூறி இருக்கிறார். அவர் என்னை விட இளமையாக தெரிகிறார் எனவும் அவர் பேசி இருக்கிறார்.
மேலும் இவர் அண்மையில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைத்தன்யா நடிப்பில் வெளியாகிய கஸ்ரடி திரைப்படத்தில் கதாநாயகியக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!