• Sep 20 2024

த்ரிஷா, ஜனனியைத் தொடர்ந்து 'லியோ' படத்தில் கமிட்டான மற்றுமோர் பிரபல நடிகை... அட இவரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அனைவரின் எதிர்பார்ப்பிலும் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் கண்டிப்பாக இந்தப் படமும் வேற லெவலில் ஹிட் ஆகும் என்று பலராலும் நம்பப்படுகின்றது.


மேலும் இப்படத்தில் விஜய் உடன் இணைந்து த்ரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது இவர்களுடன் இலங்கைப் பெண்ணான பிக்பாஸ் ஜனனியும் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன. 


இந்நிலையில் தற்போது இவர்களுடன் இப்படத்தில் மற்றுமோர் நடிகை இணைந்துள்ளதாக லேட்டஸ் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது பிரேமம் படம் மூலம் பிரபலமானவரும் ஜூங்கா, காதலும் கடந்து போகும், கவண், பா. பாண்டி ஆகிய படங்களில் நடித்தவருமான நடிகை மடோனா தான் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக கமிட்டாகியிருக்கின்றார்.


Advertisement

Advertisement