அஜித் நடித்த வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படப்பிடிப்புக்கு த்ரிஷாவிடம் இருந்து கால்ஷீட் கிடைக்கவில்லை என்றும் அவர் அஜித் படத்தை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே த்ரிஷா நீண்ட லைன் அப் வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பாக அவர் ’தக்லைஃப்’, ’விஸ்வாம்பரா’’ஐடென்டிட்டி’ ’ராம்’ ’பிருந்தா’ என்ற வெப் சீரிஸ், ’சதுரங்க வேட்டை 2’ ’1818’ மற்றும் அல்லு அர்ஜூனுடன் ஒரு படம் வெங்கடேஷ் உடன் ஒரு படம் என நீண்ட லைன் அப்பில் இருப்பதால் ‘விடாமுயற்சி’ படத்திற்கு இப்போதைக்கு அவர் கால்ஷீட் கொடுக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே த்ரிஷா கொடுத்த கால்ஷீட்டை ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் வீணடித்து விட்டதாகவும் தற்போது அவர் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி வரை கால்ஷீட் கொடுத்து விட்டதாகவும் ‘விடாமுயற்சி’ படத்திற்கு இப்போதைக்கு அவர் தரமாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஒருவேளை ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கினால் கூட த்ரிஷா இல்லாத காட்சிகள் மட்டுமே படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித் வரும் ஜூன் மாதம் முதல் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதால் அஜித்தும் சேர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தை கைவிடுவார் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் ‘விடாமுயற்சி’ படம் இப்போதைக்கு வளர வாய்ப்பில்லை என்று கூறப்படுவதால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தாலும் ’குட் பேட் அக்லி’ படத்தை விரைவில் முடித்து வெளியிட அஜித் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
Listen News!