• Sep 20 2024

‘கோட்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமல்ல.. நாயகியே அவர் தானா? சினேகா, லைலா அதிர்ச்சி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் விஜய்யுடன் சேர்ந்து த்ரிஷா நடனம் ஆடியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அவர் வெறும் நடனம் மட்டும் ஆட வில்லை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் விஜய் நடித்திருக்கும் நிலையில் நெகட்டிவ் கேரக்டர் ஒரு கேங்க்ஸ்டர் என்று கூறப்படுகிறது. இந்த கேங்ஸ்டர் கூட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நபர் தான் த்ரிஷா என்றும் ஒரு சில திருப்புமுனை காட்சிகள் அவருக்கு இந்த படத்தில் இருப்பதாகவும் அதன் பிறகு தான் ஒரு பாடலிலும் அவர் நடனமாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் அவருக்கு ஒரு நாயகிக்கு உள்ள முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.



இந்த படத்தில் ஏற்கனவே சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் தற்போது த்ரிஷா ஒரு பாடலுக்கு மட்டுமின்றி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்ற தகவல் மற்ற நடிகைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அஜித் உடன்விடாமுயற்சிபடத்தில் நடித்து வரும் த்ரிஷா, கமல்ஹாசன் உடன்தக்லைஃப்சிரஞ்சீவி உடன்விஸ்வாம்பரா’, மோகன்லால் உடன்ராம்’, நிவின் பாலியுடன்ஐடெண்டிட்டிஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த  நிலையில் தற்போது த்ரிஷா, ஒரு வெப் தொடரில் நடித்து முடித்து உள்ளதாகவும்பிருந்தாஎன்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது.  இந்த வெப் தொடரில் த்ரிஷா, போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் இந்த வெப் தொடர் மிகச் சிறப்பான முறையில் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement