• Sep 20 2024

அடப் பாவீங்களா.. அதுக்கிடல கொன்னுட்டீங்களா..? காஷ்மீர் சென்ற மூன்றே நாளில் சென்னை திரும்பிய திரிஷா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தற்போது 'லியோ' படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் வாயிலாக விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பல ஆண்டுகள் கழித்து திரிஷா நடித்து வருகிறார். 


அதுமட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ, கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், வஸந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தை லலித் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் உடைய ஷூட்டிங் ஆனது கடந்த மாதம் சென்னையில் ஆரம்பமானது. இதனையடுத்து பின்னர் மூணாறில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாத இறுதியில் விஜய், திரிஷா உட்பட ஒட்டு மொத்த படக்குழுவினரும் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்றனர். 


அந்தவகையில் காஷ்மீரில் 2 மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் அங்கு ஷூட்டிங் ஆரம்பமாகி சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங்காக காஷ்மீர் சென்ற 3 நாட்களில் திரிஷா மீண்டும் சென்னைக்கு திரும்பி இருக்கிறார். 


அதாவது அவர் நேற்று முன்தினம், டெல்லி ஏர்போர்ட் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இதனைப் பார்த்து ஷாக் ஆன தளபதி ரசிகர்கள், என்னது திரிஷாவை அதுக்குள்ள படத்தில கொன்னுட்டீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் பொதுவாகவே லோகேஷ் படங்களில் ஒன்று ஹீரோயினே இருக்க மாட்டார். அப்படி இருந்தால் அவர்களை கதையில் கொன்றுவிடுவார். உதாரணமாக கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் கூட பகத் பாசிலின் காதலியாக நடித்திருந்த காயத்ரியை கழுத்தறுத்து கொலை செய்யும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கும். 


இதேபோன்று லியோ படத்திலும் திரிஷாவை அப்படி இரண்டே நாட்களில் கொன்றுவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களோ என்கிற கேள்வி தளபதி ரசிகர்கள் பலரது மனதிலும் எழத் தொடங்கி உள்ளது. இதனை அவதானித்த நெட்டிசன்கள் சும்மா இருப்பாங்களா..?

இதனை அவதானித்த நெட்டிசன்கள் "இதுக்கு ஏன் காஷ்மீர் வரைக்கும் கூட்டிட்டு போகணும். இங்கயே செட் போட்டு கொன்னுருக்கலாமே? ஐடியா இல்லாத பசங்க" என கமெண்டுகளின் வாயிலாக கிண்டலடித்து வருகின்றனர். எது எவ்வாறாயினும் கதை என்ன?, எது உண்மை என்பது படம் ரிலீஸ் ஆனால் தான் நமக்கு தெரியவரும். அதுவரை சற்றுப் பொறுத்திருப்போம்.

Advertisement

Advertisement