• Sep 20 2024

கார்த்தியின் கிண்டல் டுவிட்டுக்கு ஸ்மார்ட்டாக பதிலடி கொடுத்த த்ரிஷா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் மணிரத்திணம் இயக்கியுள்ளார்.

பொன்னியின் செல்வன் டீசரை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட லைகா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகர்களின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி இருந்தன.

இன்றைய தினம் த்ரிஷாவின் குந்தவை போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரை மேலும், பூஸ்ட் அப் செய்யும் விதமாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இளவரசி Please send me live location, உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்!" என வந்தியத்தேவன் கதாபாத்திரத்திலேயே ஒன்றிப் போய் கிண்டலாக போட்ட டுவீட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

எங்களுக்கும் லைவ் லொகேஷன் ஷேர் பண்ணுங்க கார்த்தி, நாங்களும் த்ரிஷாவை பார்க்கணும் என ரசிகர்களும் கமெண்ட் செய்திருந்தனர். கார்த்தியின் ட்வீட்டை பார்த்த நடிகை த்ரிஷா தற்போது அதற்கு செம ஸ்மார்ட்டாக பதில் போட்டு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில், "Sorry அரண்மனையில் smart phones and smart people not allowed." என பதிவிட்டுள்ளார்.

இதனால் இதற்கு கார்த்தி என்ன பதில் ட்வீட் போடப் போகிறார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.நாளை நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் டீசர் நிகழ்ச்சியில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்கள் ராஜ உடையிலேயே வருகை தரப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement